ஸ்வீட் ஹார்ட் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி , துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ‘ஸ்வீட் ஹார்ட்’.
இப்படத்தை
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி படமான இதைத் தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

கதை களம்

வாசு (ரியோ ராஜ்)
இவர் அம்மா ஐந்து வயது இருக்கும் போது விட்டுவிட்டு அடுத்தவருடன் போய்விடுகிறார் இவரும் அக்காவும்
மட்டுமே
அப்பாவும் இல்லாததால் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் வாசு

மனு (கோபிகா ரமேஷ்)
வாசுவை காதலிக்கிறார் இருவரும் பலமுறை கருத்து பரிமாற்றத்தால் மனம் நொந்து போகிறார்கள்
வாசுவுக்கு குழந்தை வேண்டாம் ,குடும்பம் வேண்டாம் ,காதல் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்
ஆனால் மனு குழந்தை வேண்டும் குடும்பம் வேண்டும் கணவனோடு அன்னோன்யமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார் சீரியஸ் ரிலேஷன்ஷிப்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் வாசு (ரியோ ராஜ்). மறுபுறம், இவற்றில் எல்லாம் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் மனு (கோபிகா ரமேஷ்). இருவருக்குமிடையே காதல் மலர்வது
புதுமையான கதைக்களம் எதிரும் புதிருமாக இருக்கும் இந்த இளம் ஜோடிகளுக்குள்
மோதல் வெடிக்கிறது பிரிவில் முடியும் தறுவாயில், இந்த உறவால் மனு கர்ப்பமானது தெரிய வருகிறது. இதை இருவரும் எப்படிச் சமாளிக்கிறார்கள், இறுதியில் கமிட்மென்ட் உறவுகளை விரும்பாத வாசு மாறினாரா, இல்லை அதற்கு நேர்மாறாக இருக்கும் மனு மாறினாரா, இருவரும் சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது
ஸ்வீட் ஹார்ட் திரை படம்

காதலியைப் புரிந்துகொள்ளாமல் சீறுவது, தேவையில்லாத கோபம், ஆக்ரோஷம், என ரியோ படம் முழுக்கவே உறவுகள் மேல் விரக்தி, காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறும் இடம் என அழுத்தமான எமொஷனல் ரீயோ ராஜுக்குப் பொருந்தியிருக்கிறார்
நாயகி மனு
பதற்றம், காதல், கோபம், ஆற்றாமை, அழுகை என எந்நேரமும் உணர்ச்சிகளோடு மல்லுக்கட்டும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி, படத்திற்குத் தூணாக நின்று வலுசேர்த்திருக்கிறார் கோபிகா ரமேஷ்.
இன்றைய இளம் பெண்களின் மனநிலையை அற்புதமாக சித்தரித்து இருக்கிறார்

ரீயோ ராஜின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், தன் காதலி மலர் உடன் செய்யும் லூட்டி ரசிக்க வைக்கிறது அவரது ரிங்டோன் ஆண்டவன் படைச்சான் என்று வரும் போதெல்லாம் செந்தில் கதாபாத்திரத்தில்
படத்தின் காமெடி மோட்டருக்கு மைலேஜ் ஏற்றியிருக்கிறார். இறுதிக்காட்சியில் மட்டும் கவனிக்க வைக்கிறார் ரெஞ்சி பணிக்கர்.
அவரும் தன் மனைவியை கரம் பிடிக்கும் பொழுது குழந்தை உருவான பின் தான் திருமணம் செய்தார் என்று கிளைமாக்ஸ் வித்தியாசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்

படத்தில் ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது
மகளுக்கு பர்த்டே சொல்ல வரும்பொழுது அந்த அறையில் மகள் ஒரு ஆடவனுடன் அரைகுறை ஆடையில் இருந்தால் பெற்றவர் மனசு எப்படி இருக்கும் ?

சாம்பிளுக்கு மனுவிடம் வாசு கேட்க வரும் பொழுது அப்பொழுது நடக்கும் லூட்டி அட்ரா சிட்டி !

தன் அக்காவிடம் சென்று வாசு தன் காதலியின் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கேட்பதெல்லாம் இன்றைய புதுமையான பாணி !

பக்கத்து வீட்டு ஆன்ட்டி கர்ப்பமாய் இருக்க அதை காப்பாற்ற போய் துளசி அந்த குழந்தை உடல் குறைபாடுள்ள குழந்தை இருந்தாலும் அவள் அம்மா காப்பாற்றியே தீருவேன் என்கிறாள் என்று சொல்லி அந்த குழந்தையை வாசுவிடம் கையில் கொடுக்கும் பொழுது ஒரு கையில் குழந்தை எதிரே தன்னை விட்டு போன அம்மா இந்த டச்சிங் சூப்பராக இருந்தது

நாயகி தனக்கு வந்த பார்சலை தேடிக் கொண்டு போய் கொடுக்கும் பொழுது தேங்க்ஸ் கூட சொல்லாமல் வாங்கிக் கொண்டு போகும் அந்த பெருசு தன் மனைவிக்கு பர்த்டே கொண்டாடும் காட்சியை பார்த்து இருவரும் ரசிப்பது வித்தியாசமான காட்சி

நாயகி காதலுடன் பேசுவதற்கு போன் கூட இல்லாமல் சொந்த வீட்டிலேயே அக்கா போனை திருடி எடுத்துப் பேச குழந்தை திபு போட்டு கொடுக்க சுவையான காட்சிகள்
இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது

இயக்குனர் இன்றைய இளம் ஜோடிகளின் மனதை அறிந்து படம் இயக்கி இருக்கிறார் இன்று அவர்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை பிரேக் அப் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இப்படி கண்முடித்தனமாக பிரிவதால் எத்தனை பேர் வாடுகிறார்கள் என்பதை இயக்குனர் அழுத்தம் திருத்தமாக இந்த படத்தின் மூலம் பதிய வைத்திருக்கிறார்
அதேபோல பெற்றவர்கள் தங்கள் சுயநலத்துக்காக குழந்தைகளை விட்டு பிரியும் பொழுது அந்த பிஞ்சு மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அருமையாக வலியுறுத்தி இருக்கிறார்

பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லான, துறுதுறுப்பான
ஒளிப்பதிவு அப்பார்ட்மெண்டிலேயே கதை நடப்பதால் கண்களுக்கு ரிச் ஆக இருக்கிறது

. நான்-லீனியர் பாணி திரைக்கதையை, அதன் பரபரப்பும், துள்ளலும் குழையாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன்.

‘மார்டன் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா இசையிலும், குரலிலும் ‘கதவைத் திறந்தாயே’ பாடலில் மட்டும் அவரின் ‘வைப்’பை நன்றாக உணர முடிகிறது. பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது

வீட்டையும், அறையையும் வடிவமைத்த விதத்தில் சிவா சங்கரின் கலை இயக்கம் பாராட்ட தக்கது

: மதன் கார்க்கி, அறிவு, விக்னேஷ், ராமகிருஷ்ணா,
ரியோ ராஜ், ஷண்ணா,
ஆகியோர் எழுதிய பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது
:
நடன பயிற்சிகொடுத்த அசார் பாராட்ட வேண்டியவர்

ராம்குமாரின் சண்டை பயிற்சி அசத்தலாக இருக்கிறது ஆரம்பக் காட்சியே அமர்க்களம்

மற்றும் இப்படத்தின் வெற்றிக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

Costume Designer : Sridevi Gopalakrishnan
Chief Executive Officer : Vinoth Gopal
Head of Production : Srinath Viswanathan
Finance Head : John Deepak
Project Coordinator : Jayaprakash
Creative Team (YSR Films) : Thushy Sivanesan
Associate Executive Producer : Bharath Durairaj
Production Manager : Devakumar
VFX Supervisor : G.E.Ashok Kumar
Sound Mix : Jaison Jose, Daniel Jefferson
Sound Design :
என அனைவரும் இந்த வெற்றிப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் படம் வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது

மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் படத்தினை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்