ஒரத்தநாடு தான் கதை களம் ஆரம்பகாட்சியில் வைபவ் அப்பா
ஒரு இளைஞன் பெண்கள் குளிப்பதை பார்ப்பதை தெரிந்து கோபமாக அறைந்துவிட்டு ஒழுங்காக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வீட்டிற்கு செல்கிறார்.
அடடே பெருசு ரொம்ப நல்ல மனிதர் போலிருக்கே என்று ஆர்வத்தோடு உட்கார்ந்திருந்தால்
பெருசு செய்த காரியம் ரொம்ப பெருசாகவே இருக்கிறது
ஹாளஸ்யம் என்கிற இந்த பெரிய மனிதர்
வீட்டில் பக்தி பாடல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது
அப்படியே இறந்து போகிறார்,
அவரது மகன் சாமிக்கண்ணு(சுனில் )பஞ்சாயத்து போர்டு பள்ளியில் ஹெட்மாஸ்டராக பணிபுரிபவர்
அப்பா இறந்து போனதை பார்த்தவருக்கு அதிர்ச்சி!
அப்பா இறந்ததையே வெளியே சொல்ல முடியாத நிலை யில் வைபவ் (துரை கண்ணு) அங்கு வருகிறார் அப்பாவின் நிலையை கண்டு அவருக்கு அதிர்ச்சி
அடுத்து வைபவ் அம்மா தனலட்சுமி அவரது சித்தி தீபா சங்கரும் வருகிறார் அவர்களுக்கும் அதிர்ச்சி
இதை அடுத்து பெரியவர் மருமகள்
ராணி என்ற கதாபாத்திரத்தில் சாந்தினி தமிழரசன் மற்றும் சாந்தியாக வைபவ் மனைவி நிகாரிகா
இவர்களும் வந்து பார்க்க இவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்
பக்கத்து வீட்டு கமலாவாக (ரமா)
இவர் அந்த வீட்டுக்கு ள்
ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று துப்பறிவதில் குறியாக இருக்கிறார்
இதை அடுத்து பால சரவணன், கிங்க்ஸ்லீ,
சவப்பெட்டி செய்யும் கருணாகரன்,
வைபவின் சித்தப்பாவாக வரும் முனிஸ்காந்த்,
போலிச் சாமியாராக வரும் கார்த்திகேயன் ,
டாக்டராக வரும் வினு சக்கரவர்த்தி, மற்றும் ஊர் பெரியவராக வரும் கஜராஜா,
வான் மதி என
எல்லோருக்கும் இந்த பெருசு இறப்பில் உள்ள சந்தேகத்தை கிளப்புகிறார்கள்
அதன் பிறகு
அந்த வெளிய சொல்ல முடியாத பிரச்சனையை தீர்த்தார்களா,? அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்தார்களா?.
என்பதேகதை,
திரை கதை
பெருசு இப்படி ஒரு கதைக்களம் அதுவும் தமிழில் யோசித்ததே பெரிய விஷயம், அதையும் முடிந்த அளவிற்கு முகம் சுளிக்காத படி ஒரு குடும்பத்தை சுற்றியே சொன்ன விதம் சூப்பர்.
ஒவ்வொரு கேரக்டரும் அறிமுகமாகி சிரிக்க வைக்கிறார்கள் அதுவும் வினு சக்கரவர்த்தி வரும் காட்சிகளில் தியேட்டர்களில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்
ஆரம்பத்திலேயே சரக்கு போட்டு விட்டு படம் முழுவதும் போதையிலேயே வைபவ் பேசுவது போல் காட்டியது இயக்குனரின் புத்துசாலித்தனம். வைபவ் அண்ணன் சுனில் என்ன செய்வது என்ற தெரியாமல் எப்படி இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அவர் திக்கு முக்காடி அவர் கொடுக்கும் ரியாக்ஸன் ரசிக்க வைக்கிறது.
பெருசுவின் மானத்தை காக்க டாக்டர், கால்நடை மருத்துவர் ஏன் சாமியார் வரை செய்யும் கலாட்டா முதல் பாதி செம ரகளை, வைபவ் அம்மா, அண்ணி சாந்தினி, காதலி நிகாரிகா, நண்பர் பாலசரவணன் என எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
அதோடு தீபா, முனிஷ்காந்த், எல்லாத்தையும் ஒட்டு கேட்கும் பக்கத்துவிட்டு கமலாக்கா என அனைத்து கதாபாத்திரங்களும் செம யாதர்த்தம்.
அப்பாவின் மானம் போகாமல் எப்படியாவது அடக்கம் செய்ய வேண்டும் என போராடும் குடும்பம், அதை சுற்றி பல குழப்பங்களை காமெடியாகவே காட்டிய விதம் இயக்குனர் இளங்கோ ராம் இயக்குனராகவே வெற்றி பெற்றுள்ளார். Producers – Kaarthekeyen S, Harman Baweja, Hiranya Perera
Co Producer – Sasi Naga
Co Producers – Kal Raman, S. Somasegar, Kalyan Subramanian
Associate Producers – Pavan Narendra, Arulmozhithevan Kalimuthu
Executive Producer – M. Ashok Narayanan*
அருண் ராஜ் இசையில் பாடல்கள் பிரமாதம் ,
பின்னனி இசை சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்
சத்திய திலகன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
சூர்யா குமாரகாறு
படத்தொகுப்பு செய்திருக்கிறார் படம் முழுக்க விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் கொண்டு சென்றிருக்கிறார்
ஆர்ட் டைரக்டராக சுனில் அவரது பங்கு சிறப்பாக இருக்கிறது
வசனமும் திரைக்கதைக்கு உதவி செய்திருக்கிறார்
பாலாஜி ஜெயராமன்
படத்திற்கு வசனம் மிகப்பெரிய பலம் முகம் சுளிக்கக்கூடாது விரசமாக தெரியக்கூடாது ஆனால் ரசிக்க வைக்க வேண்டும் அப்படி ஒரு வசனத்தை படங்களுக்கு கொடுத்திருக்கிறார்
பாலாஜி ஜெயராமனுக்கு வாழ்த்துக்கள்
காஸ்ட்யூம் டிசைனராக நவ்ஷத் அகமது பணி புரிந்திருக்கிறார் அவரின் பங்கு சிறப்பாக இருக்கிறது
சவுண்ட் டிசைனராக தபஸ் நாயக்
புரொடக்ஷன் கண்ட்ரோலராக
ராஜ் குமார் மற்றும் கணேஷ் பணிபுரிந்துள்ளனர்
ஒப்பனையாளராக வினோத் பணியாற்றியுள்ளார் சிறப்பாக இருக்கிறது
இப்படி எல்லோரும் சிறப்பாக இந்த வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர்கள் திரு
சுரேஷ் சுந்தரா அவர்கள்
திரு. அப்துல் நாசர் அவர்கள்
படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துபடத்தை பரபரப்பாக பேச வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த பெருசு, இளைஞர்கள் முதல் பெண்கள் உட்பட அனைவருமே கலகலப்பாக சிரித்து மகிழ வேண்டிய நல்ல ஒரு காமெடி படம் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் வாரிசு என்றே இயக்குனரை சொல்லலாம்
கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் அதுதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பலம் சேர்த்திருக்கிறதுr
