வருணன் (காட்ஆஃப் வாட்டர்) திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

தண்ணீர் சேமிப்பை மையமாகக் கொண்டு ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன்’. இதில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா ஜோடியாக நடித்துள்ளனர். யாக்கை பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார

கதை களம்

ராயபுரம் பனைக்காட்டு தொகுதி எனும் இடத்தில் நடக்கும் தண்ணி கேண்
விற்பனைக்கான கேங்ஸ்டர் படம்
அய்யனார் எனும் ராதாரவி ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற
பெயரில் கேன் வியாபாரம்
நடத்தி வருகிறார்
ஜான் வாட்டர் சப்ளை
என்ற பெயரில் கேன் விற்பனை
செய்து வருகிறார் சரண்ராஜ்
இவர்கள் இருவருக்கும் போட்டி இருந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது

ஆனால் இவர்களிடம் வேலை செய்யும் சரண்ராஜின் மச்சான் டப்பா துஷ்யந்த் என்கிற தில்லை
அடிக்கடி மோதி கொள்கிறார்
இதனால் பகை அதிகமாகிறது
துஷ்யந்த் தும் சிட்டு என்கிற
கேபிரில்லாவும்
காதலிக்கிறார்கள்.
கியூட் ஜோடி.
மருதுவும் ,அக்னியும் காதலிக்கிறார்கள் இவர்கள் திருமணம் செய்ய செய்து கொள்கிறார்கள்
ஆனால் சரண்ராஜ் மச்சான் டப்பா அடிக்கடி மோதி பிரச்சினைகளை வம்பு இழுக்கிறார்
இதற்கிடையே போலீஸ் அதிகாரியான ஜீவா ரவி ராதாரவி யிடம்
நானும் தண்ணிக்கேன் விற்பனையில் கூட்டாக தொழில் செய்ய வருகிறேன்
என்று கேட்கிறார் ராதாரவி மறுக்க இதனால் இவர் சரண்ராஜ் உடன் சேர்ந்து ராதாரவி வீழ்த்த பார்க்கிறார்

ராதாரவி வீழ்த்தப்பட்டாரா ?

மருதுவும் அக்கினியும் சேர்ந்துவாழ வில்லன் விட்டாரா?

அக்னி மருது இவர்களைப் பிரிக்க ஹைட் கார்த்திக் செய்த சூழ்ச்சி என்ன?

என்பதை இரண்டு மணி நேரம் விறுவிறுப்போடு பரபரப்போடு சொல்லி இருக்கிறது இந்த வருணன்

“வருணன் காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஷை இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான ஸ்டார் மியூசிக் இந்தியா வாங்கியுள்ளது.
அந்த அளவுக்கு இந்த படத்தின் பாடல்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது யுவன் சங்கர் ராஜா பாடும் முடியாதே
பாடல் செம ஹிட் பின்னணி இசை செம ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர்

நடிகர் & நடிகைகள்

ராதாரவி அய்யனார் என்ற வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்
சரண்ராஜ் திக்குவாய் கலந்த வேடத்தில் நல்ல கதாபாத்திரமாக மிளிர்கிறார்
துஷ்யந்த் நெல்லையிலிருந்து சென்னை வந்து கேன் போடும் வேலை செய்யும் இளைஞனாக ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார் காதலியுடன் செம ரொமோன்ஸ் மற்றும்
கிளைமாக்ஸ் காட்சி யில் பறந்து பறந்து சண்டை போடுகிறார்
இவர் காதலியாககேப்ரில்லா சிட்டு என்ற கேரக்டர் சிட்டாக நடித்திருக்கிறார்
இளமை இனிமை புதுமை
ஹரி ப்ரியா அக்னி என்ற இடத்தில் எல்லோரிடமும் லிப்ட் கேட்டு பயணிக்கும் துணிச்சலான பெண்ணாக எடுத்திருக்கிறார் இவரது நடிப்பு நன்றாக இருக்கிறது மற்றும்
சங்கர்நாக் விஜயன்,
மகேஸ்வரி,
அர்ஜுனா கீர்த்திவாசன் ,
சகுனி வேலை செய்யும் வில்லனாக ஹைட் கார்த்தி ,
பிரியதர்ஷன்,
டும் கான் மாரி,
இவர்களுடன் படம் டப்பாவை மிரட்டும் ஜீவா ரவி, வித்தியாசமான வேத்தில் நம்மை கவருகிறார்

இதில் நடித்த எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

போபோ சசி பின்னணி இசை பாடல்களும் சூப்பர் ரகம்,
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமா சந்தோஷ் வடசென்னையை அற்புதமாக காட்டியிருக்கிறார்

பாடல்கள் எழுதி உள்ள போபோசசியும் ,
ஹைட் கார்த்தியும் ,
ரேஷ்மன், இவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்

பின்னணி பாடகர்களாக
யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார்,
சைந்தவி, பூபோ சசி ,
ஹைட் கார்த்தி
என பாடல்கள் பாடி ரசிக்க வைக்கிறார்கள்

முத்தையாவின் படத்தொகுப்பு ஷார்ப்பாக
ஆக இருக்கிறது
ஆர்ட் டைரக்டர் பத்து
அருமையான அரங்கம் அமைத்துள்ளார்
தினேஷ் சுப்புராயன் சண்டைக்காட்சியில் ஆனல் தெரிக்கிறது கிளைமாக்ஸ் சண்டை செம விறுவிறுப்பு
நடன பயிற்சியிளாராக
தினேஷ் பாபி
மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைத்திருக்கிறார்கள் ரசிக்கும் படி இருக்கிறது

இப்படத்தின் வசனத்தை ரமணா கோபிநாதன் எழுதியிருக்கிறார் வசனம் நச்சென்று இருக்கிறது

இந்தப் படத்தின் இயக்குனர் ஜெய வேல் முருகன்,
இந்த படத்திற்காக பல ஆராய்ச்சிகள் செய்து நீரின்றி அமையாது “உலகு என்ற கருத்தின் படி தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார் தண்ணீரைப் பற்றி நடிகர் சத்யராஜ் அவர்கள் குரல் மூலம் பேச வைத்திருப்பது சிறப்பு

1995 இருந்து தண்ணி கேன் நடைமுறைக்கு வந்தது தண்ணியை விலைக்கு வாங்கும் மக்கள் பிற்காலத்தில் தண்ணீருக்காக அலைவார்கள்
எனவே நீரின் சேமிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்
படத்தில் காதல், மோதல் ,சூழ்ச்சி என எல்லா கமர்சியலும் கலந்து கட்டி படத்தை கொடுத்திருக்கிறார் நிச்சயம் ரசிகர்களை கவரும் இயக்குனருக்கு எதிர்காலம் இன்னும் நிறைய படங்களை கொடுக்கும் படத்தை தயாரித்த யாக்கை பிலிம்ஸ் அவர்களுக்கும் படத்தை வெளியிட உதவி செய்த கோபுரம் பிலிம்ஸ் அன்பழகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில்
வருணன் அனைவரும் காண வேண்டிய படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்