ராபர் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

தமிழ் சினிமா வரலாற்றில் கழுத்துச்செயினை சாலையில் பயணிக்கும்போது வழிப்பறி செய்யும் கும்பல் பற்றிய இவ்வளவு டீட்டெய்லான திரைக்கதை வந்ததே இல்லை என அடிச்சுச்சொல்லாம். பிரமாதமான் விபரங்கள் அசர வைக்கின்றன இந்தப்படத்தைப்பார்த்து எத்தனை பேர் செயின் கொள்ளைல ஈடுபடப்போறாங்களோ? அப்டினு,
நினைக்கலாம் ஆனால்
, எத்தனை பெண்கள் இதைப்பார்த்து மேலும் ஜாக்கிரதையாக இருக்கப்போறாங்க
என்பதைத்தான் இந்த படம் வலியுறுத்துகிறது இந்த காலத்துக்கு தேவையான படம் தேவையான கதை

ஹீரோ ஃபேமிலி பேக் கிரவுண்ட் டீடெய்லா சொல்லப்பட்டிருக்கு அம்மா, மகன் என அழகான குடும்பம்.
படித்துவிட்டு வேலை தேடி சென்னை வருகிறார் நாயகன் பி பி ஓ கம்பெனியில் வேலை செய்யும் பொழுது ஒரு பெண் மீது இச்சை பட்டு அவளை அழைத்து வருகிறான் அவள் மறுக்க அதற்கு பிறகு பெண்களை அடைய வழிப்பறிச் செயின் செய்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற தவறான வழியில் இறங்குகிறான் அதன்பிறகு முடிவு என்ன?

. இன்னொரு கோஷ்டி அறிமுகம்.
அவர்தான் மைக்கேல்
டேனியல் இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார்
ஊர்ல வழிப்பறி கொள்ளை செய்யற ஒரு கோஷ்டி . அதுக்கு ஒரு தலைவன். அவன் தான் ஸ்கெட்ச் போட்டுக்குடுப்பான் அதை செயலாக்கம் செய்வது அவனது எடுபுடிகள் .
அவன் தான் மாதவன்
சத்யாவிடம பாலா
புதுசா வேலைக்கு சேர்றான். பாலைவனக்கூடாரத்துல ஒட்டகம் நுழைஞ்ச கதையா அவன் சத்யாவுக்கே
வேட்டு வைக்கிறான்

இந்த 2 கதையையும் இணைக்கும் புள்ளி எது? அந்த செயின் பறிப்புக்கும்பலால பாதிக்கப்படும்
ஜெயபிரகாஷ் குடும்பம்
… அதனால அவர் எடுக்கும் முடிவு தான் மிச்ச மீதிக்கதை

படத்தில் ஆரம்பத்தில் சிறைச்சாலைக்குள் சென்றாயன் கதை சொல்வது போல ஆரம்பித்து படத்தின் முடிவில் சென்ராயன் ஆயிரம்பவுன் நக போச்சே என்று அழுவது போல் முடித்திருப்பது படத்தை பிளாஷ்பேக்
காட்சியில் கொண்டு சென்றது
அடிக்கடி கேஜிஎப் வசனங்களை
புகுத்தியது என எல்லாமே ரசிக்க வைக்கிறது

இடை வேளை வரை
நாயகன் சத்யாவின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது வழியில் வரும் பெண்களை
குறிவைத்து அவர் நடத்தும் அந்த திருட்டு வேட்டை ஈரகுடலை நடு நடுங்க வைக்கிறது
அவர் நடிப்பும் துடிப்பாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

தீபா சங்கர்,
ஓரிரு காட்சிகள் வந்தாலும் படத்தின் இறுதி காட்சியில் கலங்க வைத்து விடுகிறார்
நீதிக்கு தலை வணங்கி மகனை என்ன செய்கிறார் என்பது சஸ்பென்ஸ்

சென்ராயன்,
சிறைச்சாலைக்குள் கதை சொல்லும் அந்த யுக்தியும் ஆயிரம் பவுன் நகையை அடைய அவர் போடும் திட்டமும் பலே

டேனி பாப்
செம மிரட்டல் வில்லனாக கலக்கியிருக்கிறார் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் ஒரு பக்கம் ஐ .டி கம்பெனியில் மறுபக்கத்தில் கத்தியை கையில் எடுக்கும் நகை பறிப்பு கும்பலுக்கு தலைவனாக அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் இனி இவர் வில்லன் வேடத்தில் பல படத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம் நிச்சயம் இயக்குனர்கள் இவரை கொடூரமான வில்லனாக பயன்படுத்திக் கொள்ளலாம் வாழ்த்துக்கள் டேனியல் சார்

தயாரிப்பு: இம்ப்ரஸ் பிலிம்ஸ் கவிதா எஸ். மெட்ரோ புரடக்ஷன் ஆனந்த் கிருஷ்ணன்
அருமையான படத்தை கொடுத்திருக்கிறது தயாரிப்பு கம்பெனி
திருமதி கவிதா அவர்கள் ஒரு பத்திரிக்கையாளராக இருந்து இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்
சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துள்ள படமாக முதல் படத்தை தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்
இது போன்ற இன்னும் பல படங்கள் அவர் தயாரிக்க வேண்டும் இந்த படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள் மேடம்

இசை: ஜோகன் சிவநேஷ்
பின்னணி இசையில்
ஒரு ராஜாங்கமே நடத்திருக்கிறார் படத்திற்கு படத்தின் விறுவிறுப்புக்கு இசை பெரிதும் உதவி இருக்கிறது இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார்
சென்னை சிட்டியின் இன்னொரு முகத்தை கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர் போன்ற பகுதிகளில் ஐ.டி வேலை செய்யும் கம்பெனிகளில் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது

கதை. திரைக்கதை: ஆனந்த கிருஷ்ணன்
அற்புதமாக கதை எழுதி இன்று சென்னையில் நடக்கும் பல வழிப்பறி கொள்ளைகளுக்கு சி.சி.டி கேமரா இன்னமும் பொருத்தப்படாமல் இருக்கிறது என்ற ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி கதை எழுதி இருக்கிறார் வாழ்த்துக்கள் ஆனந்த கிருஷ்ணன் சார்

இயக்கம்: எஸ்.எம்.பாண்டி
எந்த இடத்திலும் படம் லேக் ஆகாமல் இரண்டு மணி நேரம் ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறார் காட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக கோர்வையாக நகர்த்திச் சென்ற விதம் படம் பார்ப்பவர்களை அடுத்து என்ன? சத்தியா போலீஸில் மாட்டிக் கொள்வானா? என்ன நடக்கும் ஜெயபிரகாஷ் என்ன செய்யப் போகிறார்? ராஜா ராணி பாண்டியன் போலீசாக என்ன செய்யப் போகிறார்? மைக்கேல் எடுக்கும் முடிவு என்ன ?என்ற பாணியில் படத்தை கொடுத்திருக்கிறார் ஹீரோவை சராசரி மனிதனாக
நம்ப வைத்ததில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

வெளியீடு: சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்
இவர்கள் ஒரு படத்தை வெளியிட்டாலே அது வெற்றிப்படம் தான் என்பது ரசிகர்களுக்கு தெரியும் அந்த வகையில் இந்த படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது

. பண ஆசை, பெண் ஆசைக்கு அடிமையாகி பெண்களிடம் செயின் பறிப்பது
எவ்வளவு தவறான செயல் அது எங்கே கொண்டு போய் விடும் என்பதை
பரபரப்பான திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
சூப்பரான கிளைமாக்ஸ்

செயின் பறிப்பு கொள்ளையனாக மெட்ரோ சத்யா நடித்திருக்கிறார்.
முகத்தில் முகமூடி கட்டியதும் ரவுசு செய்ய தயாராகும் சத்யா டூவீலரில் போகும் பெண்ணின் துப்பட்டாவை இழுத்து அவரை அந்தரத்தில் பறக்கவிட்டு தரையில் மோதி சாய்த்து கொஞ்சமும். இரக்கமில்லாமல் அவரது நகைகளை திருடுவது , காதில் இருக்கும் கம்மலை அறுப்பது
என எந்த ஹீரோவும்
நடிக்க துணியாத வேடத்தில் சிறப்பாக நடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி இருக்கிறார் 2016 மெட்ரோ படம் மூலம் மிரட்டிய
சத்தியா தற்போது ராபர் படம் மூலம் ரசிகர்களை சீட்டு நுனுக்கே கொண்டு வந்து அமர வைத்து படத்தை வெற்றி படமாக்கி இருக்கிறார்

இந்த படத்தின் சகஸஸ் மீட் விரைவில் காத்திருக்கு
இந்த படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய வெற்றி இந்த படம் வெற்றி பட்டியலில்