DEXTER திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ராம் என்டர்டெய்னர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் “டெக்ஸ்டர்” கிரைம், திரில்லர், சைக்கோ கொலைகள் என படம் முழுக்க ரசிகர்களுக்கு வெறித்தனமான ஒரு விறுவிறுப்பான படத்தைக் கொடுத்து வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்த படம்

கதை களம்

சிறுவயதில் சாதிக் என்ற சிறுவனுக்கு நஸ்ரியா, புவி ,ராஜ் ,ஆதி, இவர்கள் நால்வரும் அவமானப்படுத்த அந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்பதே கதை.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை செம விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அடுத்து என்ன ?
என்ற பாணியில் பயணிக்கிறது அருமையான கிரைம், திரில்லர் படம்
எல்லா மொழிகளுக்கும் இந்த படம் வியாபாரம் ஆகும் அதுவே இந்த படத்தின் வெற்றி

நடிகர் & நடிகைகள்
ராஜீவ் கோவிந்த் (கதாநாயகன்)

ஆதி என்ற கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் யாமினி உடன் காதல் அவரது பிரிவுக்கு பிறகு சோகம் என எல்லா அம்சங்களையும் அற்புதமாக செய்து இருக்கிறார்

கிளைமாக்ஸ் காட்சி வெறித்தனமாக வில்லனை புரட்டி எடுக்கும் பொழுது அவரிடம் ஆக்ரோஷம் தெரிகிறது மனநிலை பாதித்து காதலிக்காக தற்கொலை செய்து கொள்ள அவர் ஓடும் பொழுது அவர் கண்ணில் சோகம் தெரிகிறது நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்

அபிஷேக் ஜார்ஜ்

சைக்கோ சாதிக் என்ற கதாபாத்திரத்தில் அருமையான வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்
புவியியிடம் இப்ப பாக்குறியா? இப்ப பாக்குறியா? என்று கேட்பதாகட்டும் நாயகன் ஆதியும், கான் என்ற வேடத்தில் வரும் ஹரீஷ் ஃபெராரி யையும்மிரட்டிஇருக்கிறார் விருதுக்கு தகுதியான நடிப்பு டிமான்டி காலனி படத்தில் மிரட்டியவர் இந்தி படங்களில் நடித்தவர் இந்த படத்தில் அசுரத்தனமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் படம் பார்ப்பவர்கள் வியந்து போவார்கள்

யுக்தா பெர்வி, கதாநாயகியாக

கவர்ச்சியிலும் அழகிலும் அம்சமாக கவருகிறார் அந்த முதல் பாடல் கட்சியில் இளைஞர்கள் இறங்கிப் போவார்கள் அந்த அளவுக்கு இளமையை தெறிக்க விட்டிருக்கிறார்

சித்தாரா விஜயன்

புவி என்ற கதாபாத்திரத்தில் ஆதிக்கு உதவி செய்யும் நல்ல வேடம் அப்பா அம்மாவை கண்டுபிடித்து நாயகனை காப்பாற்றும் வேடம்
சிறப்பான முறையில்
செய்து
இருக்கிறார்
ஹரிஷ் பெர்டி,
கான் என்ற வேடத்தில் மிரட்டி இருக்கிறார்
அஷ்ரப் குருக்கள்,
சண்டை காட்சியில் அசத்தியிருக்கிறார்
சோபா பிரியா,
நடிப்பு நன்றாக இருக்கிறது
குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன்
இவர்கள் நடிப்பு படத்தின் வெற்றிக்கு உதவி யிருக்கிறது

ஒளிப்பதிவு –
ஆதித்ய கோவிந்தராஜ்
அற்புதமான ஒளிப்பதிவு காடுகளையும் அந்த மலைகளையும் அழகாக அம்சமாக கண் முன் நிறுத்தி இருக்கிறார் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவாளருக்கு

இசை- ஸ்ரீநாத் விஜய்
பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது மிரட்டி இருக்கிறார் படத்தின் பலமே பின்னணி இசைதான் பாடல்களும் ரசிக்க வைக்கிறது

பாடல்களை மோகன்ராஜன்
எழுதி இருக்கிறார் ரசிக்க வைக்கிறது

படத்தொகுப்பு-
ஸ்ரீனிவாஸ் பி.பாபு
ஷார்ப்பாக இருக்கிறது படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

சண்டை பயிற்சி- அஷ்ரப் குருக்கள் & கே.டி வெங்கடேஷ்
சண்டைக் காட்சிகளில் அனல் தெரிக்கிறது செம விறுவிறுப்பு

நடனம் – சினேகா அசோக்
நடனம் ரசிக்க வைக்கிறது

மக்கள் தொடர்பு -வெங்கட்
அவர்கள் படத்தை
மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்
ஷார்வாக்கா V.N

கதை – சிவம்

தயாரிப்பு -பிரகாஷ் S.V

திரைக்கதை
வசனம் இயக்கம்-
சூரியன்.G
இயக்குனர் உண்மை சம்பவத்துடன் கற்பனைக் கலந்து
இப்படத்தை எடுத்திருக்கிறார் இன்று இளைஞர்கள் காதலி இல்லாவிட்டால் வாழவே முடியாது என்ற தத்துவத்தையும் சின்ன வயதில் ஒரு சம்பவம் ஏற்பட்டு விட்டால் மன்னிப்பு கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வராது என்ற ஒரு தத்துவத்தை
சேர்த்து ஒரு விறுவிறுப்பான திரை கதையை அழகாக கொடுத்திருக்கிறார் பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் திரைக்கதை எழுதிய விதமும் பாராட்டுக்கள்
இயக்குனர் கமர்சியல் டைரக்டராக இன்னும் நிறைய படங்கள் இயக்க வாய்ப்பு வரும் வாழ்த்துக்கள்

பாடல்கள் / பாடியவர்கள்
————————–
யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ…….. ஸ்வேதா மோகன்

மிளிரும் பின்னாலி
சுழலும் விழிகாரி……. சத்ய பிரகாஷ்

மொத்தத்தில் இந்த படம் எல்லத்தரப்பு
ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது நிச்சயம் வெற்றி பட்டியலில் இப்படம் இடம் பிடிக்கும்

ஹரி உத்ரா கம்பெனி சார்பில் உத்ரா இந்த படத்தை வெளியிடுகிறார் அவர் இதற்கு முன் வெளியிட்ட படங்கள் அனைத்தும் வெற்றிவாகை சூடி இருக்கிறது அந்த வகையில் இந்த படமும் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

இந்த படத்திற்கு விரைவில் சக்சஸ் மீட் காத்திருக்கிறது
வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா