தெய்வா புரொடக்சன்ஸ் சார்பில் கப்பலில் கேப்டனாக பணிபுரிந்த தயாரிப்பாளர் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரித்துள்ள படம் ‘மாடன்’.
நாட்டார் புறத்து கதைகளான சுடலைமாடன் திருவிழா பற்றி சொல்கிறது இந்த படம்
இந்தப் படத்தில் இளம் நாயகனாக கோகுல் கௌதம்(முருகன் )
அறிமுகமாக அவருக்கு ஜோடியாக ஷார்மிஷா(வள்ளி)
என்ற கதாபாத்திரத்தில்
நடிக்கிறார்கள்
. மேலும் இதில் டாக்டர் சூரியநாராயணன்,(ஞான முத்து)
சூப்பர் குட் சுப்ரமணியம்
(தாமஸ்), ஸ்ரீபிரியா(மேரி
என்ற கதாபாத்திரத்தில்
நடித்திருக்கும் இப்படத்தில்
, திருநங்கை ரஸ்மிதாவும்(மாதவி)
என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
.
சின்ராஜ் ராம் ஒளிப்பதிவையும், விபின்.ஆர். இசையையும், ரவிசந்திரன்.ஆர். படத் தொகுப்பையும், வே. ராமசாமி, கார்த்திக் கிருஷ்ணன் பாடல்களையும், நெய்வேலி பாரதிகுமார், ஒரு பாடலையும், வசனமும் எழுதி இருக்கிறார். மாஸ்மோகன் சண்டை பயிற்சியையும், ராக்சங்கர் நடன பயிற்சியையும், குட்டி கிருஷ்ணன் தயாரிப்பு நிர்வாகத்தையும்
சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்
பல குறும் படங்களை இயக்கியுள்ள இரா. தங்கபாண்டி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக இயக்கியுள்ளார்.
அற்புதமான இயக்கம்
இயல்பாக இருப்பது எந்த இடத்திலும் கதாபாத்திரங்கள் அதன் தன்மையை விட்டு விலகாமல் கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார் ஒரு நல்ல படம் பார்த்து திருப்தியை இயக்குனர் கொடுத்திருக்கிறார்
நாயகன் கோகுல், முருகன் என்ற கதாபாத்திரத்தில் அமைதியாக வில்லனை எதிர்க்கும் பாணியில் நம்மை கவர்கிறார் ஞானமுத்து என்ற வேடத்தில் டாக்டர் சூரிய நாராயணா நன்றாக நடித்துள்ளார்
சூப்பர் ஹிட் சுப்பிரமணி
ஸ்ரீ பிரியா மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் அனைவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது
கதை களம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
ஒரு கிராமம் முருகன் என்ற இளைஞன் வேலை தேடி சென்னை வருகிறார் அப்போது அவர்கள் சித்தப்பா பழவேசம், முருகனை தேடி
வருகிறார்
உன் பாட்டி உடல்நலம் எல்லாம் இருக்கிறார் உன்னை பார்க்க விரும்புகிறார் என்று அழைத்து வருகிறார் முருகன் திருநெல்வேலி வருகிறார் ஊருக்கு வந்ததும் பாட்டி உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது நம்ம குலசாமி சுடலை மாடன் கொடை விழாவை நீ தான் நடத்த வேண்டும் என்கிறார்
ஆனால் இவரின் அப்பா உடல் நலம் இல்லாமல் இருந்தபோது இந்து மதத்தை விட்டு கிறிஸ்துவ மதத்திற்கு மதமாறுகிறார்
உடல் நலம் இல்லாத போது ஊருக்கு பொதுவான சுடலைமாடன் கோயில் சொத்துவை
ஞானமுத்துவிடம் கொடுத்து இரண்டு லட்சம் வாங்கி ஆஸ்பத்திரி செலவு செய்கிறார்
ஆனால் ஞானமுத்து விடம்
முருகன் வந்து கேட்கும் போது 30 லட்சம் கொடுத்தால் இந்த இடத்தை கொடுக்கிறேன் என்கிறார்
ஊர் பஞ்சாயத்து கூடுகிறது ஞானமுத்து பஞ்சாயத்துக்கும் பிடி கொடுக்கவில்லை வழக்கறிஞரான எஸ்தரிடம் சென்று முருகன் வழக்கு தொடுகிறான்
முருகனின் ஒரே லட்சியம் சுடலை மாடன் கொடை விழாவை நடத்துவது அதற்கு தடையாக இருக்கும் ஞானமுத்துவை தன் சித்தப்பா மாசாணியம், பழவேசம் இவர்கள் துணையோடு வீழ்த்தினாரா?
தன் காதலி வள்ளியை கைப்பிடித்தாரா?
தெய்வமான சுடலை மாடன் கோவில் திருவிழாவை
நாயகன் நடத்தினாரா?
கூத்து கட்டும் மாதவி முதல் காட்சியிலேயே இறந்து கிடக்கிறார்
மாதவியை கொன்றதுயார்
என்று கண்டு பிடித்தாரா?
என்பது கதை களம்.
இன்றைக்கு அதிவேகமாக கிராமங்கள் நகரங்களாகிக் கொண்டிருக்கும் உலக சூழலில் கிராமியப் படங்களுக்கான வரவேற்பு மேலும் அதிகரித்திருக்கிறது. அறிமுக இயக்குநரான தங்கபாண்டி திருநெல்வேலி மாவட்டத்து கிராமப் பின்னணியில் ‘மாடன்’ படத்தை
மிக இயல்பான படமாக அதிக ஒப்பனை இல்லாமல் கிராமத்தில் நாம் சந்திக்கும் நிஜ மனிதர்களைப் போல கதாபாத்திரங்களையும் வடிவமைத்து எல்லோரையும் இயல்பாக நடிக்க வைத்துள்ளார்
..
“கரிசல் நிலத்தில் நடக்கும் கதைக்களம்.
என்பதால் யாருக்கும் ஒப்பனை இல்லை நாயகிக்கு மட்டும் சில நேரங்களில் பவுடர் பூசி ஜிகு ஜிகு என்று காட்டி உள்ளார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் நாட்டார் தெய்வமான சுடலைமாடன் கோவிலில் பல ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமலேயே இருக்கிறது
இதுபோன்று கதைகள் நாம் நிறைய கேட்டிருப்போம் அதை மனதுக்கு நெருக்கமாக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் நாயகியும் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது
நாயகி வள்ளி
வாயாடியாக துடுக்காக பேசி தன்னை பெண் பார்க்க வரும் மாமியார் வரதட்சணை அதிகமாக கேட்க உன் மாப்பிள்ளைக்கு அவ்வளவு விலை கொடுக்க முடியாது என்று நறுக்காக பேசும் காட்சிகளும் சரி நாயகனிடம், ஜாடை மாடையாக காதலை சொல்லும் காட்சிகளாகட்டும் ரசிக்க வைத்த காட்சிகள்
படம் முழுக்க சுடலைமாடனாக வரும் அந்த வெள்ளைக் குதிரை கொஞ்சம் பயமுறுத்தல்
கிராமத்தில் ஒருவர் உடல் நிலை சரியில்லை என்றால் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெபம் செய்து அவர்களை மதம் மாற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது அதையும் இயல்பாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மக்கள் நிறைய பேர் இதில் நடித்திருக்கிறார்கள் நிஜமான ஒரு சுடலை மாடன் திருவிழாவை பார்த்த ஒரு சந்தோஷமும் பரவசமும் ஏற்படுகிறது எல்லோரும் நெல்லை பாஷையில் பேசுவது கதை காத்திருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது
மாதவியாக எடுத்திருக்கும் ராஷ்மிகா திருநங்கைகளின் உணர்வுகளை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் பழவேசம் என்ற கதாபாத்திரத்தை பார்த்து நீ சாப்பாடு இல்லை என்று ஏங்குகிறாய் ஆனால் நாங்கள் அனாதைகள் போல் வாழ்கிறோம் என்று சொல்லும் காட்சி மனதை ஏதோ செய்கிறது
எல்லா கிராமத்திலும் ஒரு எல்லைச்சாமி உண்டு. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது. சுடலைமாடனின் தொல்கதையையும் சொல்லும் விதமாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிராமத்து வாழ்க்கையை விரும்புகிற அனைவருக்கும் இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும் ”.
: விபனின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது பாடல்களும் நன்றாக இருக்கிறது
சின்ராஜ்ராம் ஒளிப்பதிவு சூப்பர்
ரவிச்சந்திரன் படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது
இப்படத்துக்கு பாடல்கள் பாடிய ,பத்மஜா ஸ்ரீனிவாசன் ,
சிபி சீனிவாசன் ,
கோபி தேவராஜ் ,
வைஷ்ணவி கண்ணன், விபின் குரல் ரசிக்க வைக்கிறது
பாடல்களை ராமசாமி,
நெய்வேலி பாரதி, குமார் தமிழ்மணி, கார்த்திக் கிருஷ்ணன் ,எழுதி உள்ளனர்
இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர், மற்றும் மேக்கப் மேன், காஸ்ட்யூமர், அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள்
இந்த படத்தை மக்கள் தொடர்பாளர் விஜய் முரளி அவர்களும், கிளாமர் சத்யா ,உதவியாராக உதய் என எல்லோரும்
நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்
இந்த படம் கிராமத்து காதலையும் ,நாட்டார் குலத்து குலதெய்வ வழிபாடு ,மற்றும் எல்லா அம்சங்களையும் அற்புதமாக சொல்லி இருக்கிறது.
இது போன்ற படங்கள் வெற்றியடையும் போது தமிழ் சினிமா தலைநிமிரும்
நல்ல படங்களை ஆதரிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்
