இயக்குநர்: மோஹிட் ராம்சந்தானி விநியோகஸ்தர்: Roadside Attractions ஒளிப்பதிவு: அலேஜான்ரோ சாவேஸ் எடிட்டர்: மேத்தியூ டிசெல் நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: யாலிட்சா அபாரிசியோ, …
கதை களம்
கலிபோர்னியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் 65 குழந்தைகளை போலீஸ் மீட்டெடுத்து அந்த சம்பவத்தை உலகெங்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற தமிழர் ஒருவரின் உன்னதமான படைப்பு சிட்டி ஆப் ட்ரீம்ஸ்
அமெரிக்க வில் அண்டர் கிரவுண்ட்டில் செயல் படும் கொத்தடிமைகள் பற்றி இந்த படத்துல
இயக்குனர் சொல்லி இருக்கிறார்
வாய் பேச முடியாத jesus mexico நாட்டை சேந்த ஒரு சின்ன பையன் இருக்கான். அவன் கனவு புட் பால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பது
சிறுவனை லாஸ் ஏஞ்சல்ஸ் கடத்தி வந்து விற்பனை செய்து விடுகிறார்கள் அவனிடம் soccer team ல தான் கலந்துக்க போறோம் என்று பொய் சொல்லி சிறுவனை ஒரு வீட்ல வந்து விடுவார்
அந்த வீட்டில் பல நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட பெண்கள் ஆண்கள் சிறுமிகள் என நிறைய பேரை கொத்தடிமைகள் என இரவு பகலாக டைலரிங் வேலை வாங்குகிறார்கள்
சிறுவன் ஆரம்ப காட்சிகளில் துணி தைக்க தெரியாமல் மேனேஜரிடம் நிறைய அடி வாங்குகிறான். அவனுக்கு ஆறுதல் கூறும் ஒரு பெண்னை இரவில் கடத்தி சீரழிக்கிறது
ஒரு இரவில் ஜீசஸ் அதை கண்டுபிடிக்கிறான் அதனால் அவனுக்கு செம அடி கொடுக்கப்படுகிறது மேனேஜரால் வலி தாங்க முடியாமல் அலறுகிறான்
எப்படியாவது அங்கிருந்து தொப்பி விட வேண்டும் என்று முயற்சி செய்கிறான் ஜீசஸ் .இவன் உடன் வேலை செய்யும் இன்னொரு பையனும் அடி வாங்குகிறான் ஒன்று இங்கிருந்து தப்பிக்கணும் அல்லது இவர்களை எதிர்த்து சண்டை போடனும்.
இதில் எந்த முடிவு எடுக்கிறான் ஜீசஸ் என்பது விறுவிறுப்பான திரைக்கதை
இந்த படத்துல (jesus) ஆக நடித்துள்ளார் ari lopez ன் நடிப்பு நன்றாக இருந்தது
ஒரு கொடூரமான கூட்டத்துக்கு தெரியாத ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டு விழிப்பது அடி வாங்குவது தப்பிக்க முயற்சி செய்வது தப்பித்தாலும் போலீசுக்கு இருக்கும் பிரச்சனை யால மீண்டும் அதே கொடியவர்களிடம் மாட்டிக் கொள்வது என சிறுவன் நடிப்பு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி பரிதாப பட வைக்கும்
அமெரிக்க என்றாலே ஒரு பாதுகாப்பான நாடு வல்லரசு நாடாக இருக்கிறது
குழந்தைகளுக்கு அங்கு பாதுகாப்பு இருக்கும் என்கிற பிம்பத்தை இந்த படம் உடைத்தெறிந்தி ருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் அந்த நாட்டின் பிரசிடெண்ட் என பல பேரை காட்டியிருக்கிறார் எத்தனை பேர் மாறினாலும் இந்த கொடூரம் நடந்து கொண்டே தான் இருக்கிறது 12 மில்லியன் குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள் இந்த பகீர் தகவலை இயக்குனர் போட்டு உடைத்து இருக்கிறார்
அதுவும் ஒரு தமிழன் என்பது நாம் பெருமைப்படத்தக்க விஷயம் தேனி மாவட்டம் கம்பம் என்ற ஊரைச் சேர்ந்த தமிழர்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார் உலக நாடுகளில் தவறுகள் எங்கு நடந்தாலும் அதை சுட்டிக் காட்ட வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்வோடு சமுதாய நலனுக்காக இந்த படத்தை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது
இந்த படத்துல சிறுவன் மற்றும் பெண்களை அடிப்பது,
காதல் கொண்டேன் படத்தில் சிறுமிகளுக்கு பாலியல் இச்சை கொடுப்பது போல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது
என இயக்குனர் விரிவாக சொல்லி இருக்கிறார்
படம் பார்க்கும் நமக்கே பகீர் என்று இருக்கிறது
குழந்தைகளை பெண்களை தொலைத்துவிட்டு தவிக்கும் அப்படிப்பட்ட இதயங்கள் என்ன வேதனைப்படும் என்பதை இயக்குனர் அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்
சிறுவன் ஜீசஸ் அந்த
குடோனில் இருந்து
புத்திசாலித்தனமாக தப்பித்து விடுவான் அப்பாடா என்று படம் பார்த்தவர்களுக்கு ஒரு கார்மெண்ட் பேக்டரில் இருந்து மீண்டும் தப்பிக்க ஓட்டம் எடுத்து போலீசிடம் மாட்டி போலீசை மீண்டும் அந்த கொடூரர்களிடம் ஒப்படைப்பது அதிகார வர்க்கம் அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி உலக நாடுகளிலும் சரி பணக்காரர்கள் பக்கம் தான் சட்டமும் காவல்துறையும் செயல்படும் என்பதற்கு இந்த ஒரு காட்சி உதாரணம்
சிறுவன் ஜீசஸ் அந்த கம்பெனியின் மேனேஜர் அடித்து துவைத்து ரத்தம் தெறிக்க முதுகில் சாட்டையால் விளக்கும் பொழுது எப்படியாவது இந்த சிறுவன் தப்பித்து விட மாட்டானா என்று என்ன தோன்றுகிறது அதுதான் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி முதுகில் அடி தழும்பு ரத்தம்என் று வயலெண்ட் அதிகமாக காட்டியிருப்பார்கள் வயதானவரையும் அடிப்பது . அவரோட வயித்துல எட்டி மிதிப்பது அ
அந்த வயதானவர் அந்த அடிபட்டு மயங்கி கிடைப்பது. இந்த மாதிரி சீன் எல்லாமே ரொம்ப விறுவிறுப்பான பகுதி
சிறுவனுக்கு அடிக்கடி கால்பந்து விளையாட்டில் கோல் அடிப்பது போல கனவு வந்து கொண்டே இருக்கும் கடைசி காட்சி வரை அது நிறைவேறாமல் போகும் அந்த கொடூர மனிதர்களிடம் இருந்து தப்பித்து வெளியே வரும் பொழுது கோல் அடித்து விடுவான் இது இயக்குனர் டச்
கேமரா லாஸ் ஏஞ்சல் சை நகரை நன்றாக படம் பிடித்து காட்டி இருக்கிறது இருட்டு அறைக்குள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சித்ரவதை அனுபவிக்கும் போது கேமரா பயமுறுத்தி இருக்கிறது
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது
மற்ற கலைஞர்கள் அனைவரும் இந்த படத்திற்காக நன்றாக உழைத்து இருக்கிறார்கள்
இயக்குனர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் நல்ல ஒரு கதையை தேர்வு செய்து ஒரு சமூக கருத்தை சொல்லி இருக்கிறார் நிச்சயம் இந்த படம் வெற்றி பட்டியலில் இணையும்
இந்த படத்தின் பட்ஜெட் நான்கு கோடி என்று சொல்லப்படுகிறது உலகம் முழுதும் நிறைய தியேட்டர்களில் வெளியாகும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது
இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் சாவித்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
எழுதியும் இயக்கியதும் – மோகித் ராம்சந்தானி
அருமையான டைரக்ஷன்
நடிகர்கள் – ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் ஆகியோரின் நடிப்பு சூப்பராக இருந்தது
ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ் கேமரா கோணம் நன்றாக இருந்தது
இசை – லிசா ஜெரார்ட் பின்னணி இசை மிரட்டல்
இப்படி எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள்
