கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-/5

இயக்குனர் கே. ரங்கராஜ் இயக்கியுள்ள “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ”
இந்த படத்தில்
ஸ்ரீகாந்த் – புஜிதா பொன்னாடா நடித்ிருக்கிறார்கள்
முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் MY INDIA மாணிக்கம் தனது முதல் தயாரிப்பாக தயாரித்திருக்கிறார்

உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
கதை திரைக்கதை சீராக இருக்கிறது படம் முழுக்க காமெடி நடிகர்கள் நிறைய நடித்திருக்கிறார்கள்

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வசனம் – PNC கிருஷ்ணா
ஒளிப்பதிவு – தாமோதரன்.T
இசை – R.K.சுந்தர்
எடிட்டிங் – கே.கே
பாடல்கள் – காதல் மதி
கலை – விஜய் ஆனந்த்
நடனம் – சந்துரு
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – MY INDIA மாணிக்கம்
கதை, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் – K.ரங்கராஜ்

கதை களம்

வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கியுள்ளது
நாயகன் ஸ்ரீகாந்த் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீதர் செல்லையா என்ற கோடீஸ்வரனிடம் வேலை செய்கிறார்
நாயகி நடிகை சச்சு விடம் வேலை செய்கிறார் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கோடீஸ்வரர் என்று பொய் சொல்லி காதலிக்கிறார்கள் ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வர இருவரும் நீதான் பிராடு என்று சொல்லி பிரிகிறார்கள்

அதன் பிறகு பெங்களூருக்கு சென்று நாயகனுக்கு
கோடீஸ்வர பெண்ணும்
நாயகிக்கு கோடீஸ்வர மாப்பிள்ளையும் அமைகிறது ஆனால் பணக்காரர்கள் இருவரையும் அவமானப்படுத்த பணம் முக்கியம் இல்லை அன்பு தான் முக்கியம் என்று புரிந்து கொண்டு ஒன்று சேர்கிறார்கள்
இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சிகாக உண்மையான கிளைடர் பயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம் பிடித்துள்ளனர்
அந்த காட்சிகள் திரையில் பார்க்க மிகவும் பிரம்மாண்டாமாக இருக்கிறது

அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய குடும்ப பாங்கான, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள் சென்னை மற்றும் கொடைக்கானலில்
படத்தை எடுத்து சிறப்பாக மக்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்
படத்தின் ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், படத்தொகுப்பு, ஆர் டைரக்டரின் பணி, ஒப்பனையாளர், காஸ்ட்யூமர், சண்டை பயிற்சியாளர் ,என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்

இந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர் மணவை புவன் இந்த படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.