இயக்குனர் அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகி யுள்ளபடம் ‘சப்தம்’. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம்
சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் இசையில் உடல் சிலிர்த்து வைக்க வைத்த, தமன் உண்மையில் அவர் தான் முதல் ஹீரோ
அதே போல க்ளைமாக்ஸ் காட்சியிலும் பின்னணி இசை அருமை.இது ஒரு இசை சம்பந்தமான படம் முழுக்க முழுக்க ரசிக்க வைக்கிறது
நாயகன் ஆதி, சரியான தேர்வு, பின்னி பெடலெடுத்து இருக்கிறார்
இதில் உடல் இளைத்து ட்ரிம்மாக நல்லா மேன்லியாக இருக்கிறார்,
கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அலட்டிக் கொள்ளாத சிறப்பான நடிப்பு
அடுத்து லைலா, நடிப்பு சூப்பர் சாதாரணமாகத் தெரிபவர் போகப் போக அவரின் உண்மையான முகம் தெரியும் போது அதிர்ச்சி அடைய வைக்கிறார்.
எப்படி இருந்தவர் இப்படி மாறி விட்டாரே என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.
ஆனால், அவர் அப்படி மாறுவதற்கு காரணத்தை இயக்குனர் உடனே நியாயப்படுத்தாமல் தொடக்கத்தில் இருந்தே அதற்கான காரணத்தைக் காட்சி அமைப்பிலும் வசனத்திலும் காட்டி
இருக்கிறார்” ஈகோ”
சிம்ரன் மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார் சூப் பர் பர்பாமென்ஸ்
அமானுஷ்ய கதைகளில் நியாயமாக எழக்கூடிய கேள்விகளை கதை சொல்லும் விதத்தில் சமாளித்துள்ளார் இயக்குனர்.
முகேஷ், தீபிகா, ஸ்வேதா,
அவந்திகா இவர் களுக்குள் என்ன ஒற்றுமை என் தேடல் கதையில்
பேய் கள் வெள்ளை புடவை சுற்றிக் கொண்டு வரும் பேத்தல்களுக்கு எல்லாம் சமாதி கட்டியுள்ளது பாராட்டுதலுக்குரியது. அலட்டிக்காமல் வந்து விட்டு போகும் ஆவேசம் படும் ஆவிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதனால் பேய் படம் பார்க்கும் நமக்கும் சப்தத்தை வைத்து இப்படி யெல்லாம் படம் பண்ணமுடியும் என்று காட்சியமைப்புகளும், இசையும் திகிலுக்கு பஞ்சம் வைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை
இசையும் சப்தமும்
உணர்வும் மாறி மாறி படம் முழுவதும் வருகிறது. ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கு குறியீடாக ஒரு சிம்பிள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு படத்தில் உபயோகப்படுத்துக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் முறையாக பயன்படுத்தியுள்ளனர்
ரொம்ப நாள் ஆயிற்று இந்த ஜேனரில் படம் பார்த்து, அதுவும் இந்தளவுக்கு டெக்னிகல் எக்ஸலன்ஸோடு. காட்டி இருப்பது பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள் மேக்கிங்கில்.
இது ஒரு டெக்னாலஜி கலந்த பேய் படம் “சப்தம்”
ஸ்ரேயா , முகேஷ், சாவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. இவர்கள் சாவு பற்றிய விசாரணையை, துவங்கும் பேய் இன்வெஸ்ட்டி கேட்டராக ஆதி வருகிறார். தற்கொலையாக கருதப்படும் சாவை, ஆதி மட்டும் கொலையாக பார்க்க, தொடர்ந்து அதே மருத்துவ கல்லூரி படிப்பவர்கள் கொலை செய்யப்பட, இருப்பதாக கதை செல்கிறது
மேலும் இறுகுகிறது சிக்கல், யார் அந்த பேய் கள் என்று தெரியாத நிலையில், கொலைக்கான ஆயுதம் சப்தம் என்பதை கண்டுபிடிக்கிறார் மாணவர்கள் மூவர் இருந்தது தற்கொலையா? அவர்கள் இறந்ததுக்கான காரண்ம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாய் பதில் சொல்லியிருக்கிறார்கள்
படத்தின் முதல் காட்சியே நம்மை சீட் நுனிக்கு கொண்டு வருகிறார்கள், மும்பையில் தியா, என்ற குழந்தை டெவில் ஆக ஏன் மாறியது என்று, ஆரம்பித்து, அதற்கு பிறகு வரும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளாகட்டும், அமானுஷ்ய காட்சியாகட்டும், சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.
எம் எஸ் பாஸ்கர் சவப்பெட்டி செய்யும் காட்சி மிரட்டல்
முதல் பாதி முழுவதும் ஆதி லட்சுமி மேனன், இருவருக்கும் கேள்வி களமாக இயல்பாய் விரிகிறது. இரண்டாம் பாதியில் சிம்ரனின் ப்ளாஷ்பேக், ”லைலா என்ட்ரி டேனியல் யார் என்று
பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறது சில்லிட்ட உணர்வோடு, அதை நாம் உணர்கிறோம்
லட்சுமி மேனன் மிக அழகான கண்ட்ரோல்ட் பெர்பாமென்ஸ், டயலாக் டெலிவரியிலாகட்டும்,பாடி லேங்குவேஜிலாகட்டும், அவ்வளவு இயல்பு.
அழகான ராட்சசி லட்சுமி மேனன் இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்
அவந்திகாவாக லட்சுமி மேனன் நீண்ட நாளைக்கு பிறகு மருத்துவராக வந்து படத்திற்கு மிக்க பலமாக அமைந்துள்ளார்
நீண்ட நாட்களுக்கு பிறகு டயானா என்கிற கதாபாத்திரத்தில் சிம்ரன், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக வந்து அன்பைப் பொழிந்து நம்மையும் கவருகிறார் படத்தின் மையப் புள்ளியே இவர்தான்
லைலா இந்த படத்தில் செம ஸ்டைலிஷ் ஆன நான்சி கேரக்டரில் அசத்தியிருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் தூள் படுத்திருக்கிறார
ஆரோக்கியம் என்ற கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆண்டனி யாக எம் எஸ் பாஸ்கர்,
ராஜீவ் மேனன் டேனியல் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
விவேக் பிரசன்ன தீபக் என்ற கதாபாத்திரத்தில் ஆதியின் நண்பனாக வந்து அசத்தியிருக்கிறார்
அபிநயா நடிப்பு நன்றாக இருக்கிறது அனைத்து நடிகை நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்
:இயக்குனர்
கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் அறிவழகன் இவரின் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது ஒரு பேய் கதை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் எதிர்பாராத திருப்பங்கள் காட்சியில் அமைப்பில் தரமான மேக்கிங் தரமான இயக்கம் என்று டெக்னிக்கல் விஷயத்தில் கதை சொல்லும் பாணியில் உயர்ந்துநிற்கிறார்
ஈரம் சிலிர்க்க வைத்தது சப்தம் மிரட்டி இருக்கிறது
தயாரிப்பாளர்
*Producer : 7G Siva
Co Producer : S.Banupriya Siva
Banner : 7G Films
In Association with : Aalpha Frames
Our Business Partners: Revanza Global Ventures PVT LTD, T3 Streaming PVT LTD*
ஒளிப்பதிவு
அருண் பத்மநாபன்
ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் மெனக்கெட்டு உழைத்து இருக்கிறார் கண்களுக்கு இரவு நேர காட்சிகளுக்கு செம ட்ரீட்
படத்தொகுப்பு
சாபு ஜோசப் எடிட் செய்திருக்கிறார் கச்சிதமான படத்தொகுப்பு படத்தில் விறுவிறுப்புக்கு
பஞ்சமில்லை
பாடல்கள்
விவேகா பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது
சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார் ஸ்டன்னர் ஷாம் கிளைமாக்ஸ் காட்சி சன்டை ரசிக்க வைக்கிறது
ஆர்ட் டைரக்டர்
இந்த படத்தில் இரண்டாவது ஹீரோ ஆர்ட் டைரக்டர் மனோஜ் அருள் அற்புதமான அரங்க அமைப்பு பழைய லைப்ரரி கோஸ்ட் செட்டப் விவேக் பிரசன்னாவின் அலுவலகம் எம் எஸ் பாஸ்கர் சவப்பெட்டி செய்யும் இடம் ஆரம்பக் காட்சிகளில் கோஸ்ட்டை கண்டுபிடிக்கும் மும்பை காட்சி என எல்லா இடங்களிலும் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது சூப்பர்
மற்றும் இந்த படத்திற்காக உழைத்திருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள்
*DI: Pixel Light Studio
Colorist : Ranga
Costume Designers : Sonika Grover/ Pradeepa
Costumes : PR Ganesh
Makeup : Shanmugam
PRO : Sathish Kumar (S2 Media)
Stills: D Maneksha
Publicity Designer : Pawan
Marketing and Promotions : DEC
Sound Design: Sync Cinema
Audiography : T Uday Kumar
Visual Effects : DTM Lavan / B.Senguttuvan
Production Supervisor: Nithin
Executive Producer: R Balakumar
Core Direction Team: : Kumar Ramasamy.N, Senthilkumar Veerapan, Ramachandran, Ravichandran .R, Melbin Ravi, Vishnu Rajkumar, Kavin Ko, Bijish T.P*
என அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்திற்காக கடுமையாக உழைத்து தரமான படத்தை கொடுத்திருக்கிறார்கள்
மொத்தத்தில் இந்த ” “சப்தம்” ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருந்து சேவைகள் செய்ய சொல்லி இருக்கிறார்கள்
ஈகோ பார்க்காமல் வாழ வேண்டும் அன்பை விதையுங் கள் என்று சொல்லி இருக்கிறார்கள்
கோஸ்ட் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் கொண்டது என்பதையும்
முப்பத்தி நான்கு வருடங்கள் நாற்பத்திரண்டு குழந்தைகள் அமானுஷ்யங்கள்
இசை கேட்டால் கோஸ்ட் சாந்தமடைவதும், ஆக்ரோசமாக கைதட்டினால் ஆவேசம் படும் என்று அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்
வெற்றி ஓசையை ஓங்கி ஒலிக்கும் ” “சப்தம்”
மக்கள் தொடர்பாளர் சதீஷ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
